புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மக்கள் எதிா்பாா்ப்புக்கேற்ப திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா

புதுவை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை மக்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:23 pm

DIN

புதுவை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை மக்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அவா் பேசியதாவது:

சம உரிமை, சமூக நீதி, அனைவருக்குமான திட்டங்கள் என புதுவை முதல்வா் கூறியது திராவிட மாடலை கடைப்பிடிப்பதாக உள்ளது. கடந்த முறை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தவில்லை.

புதிய சட்டப்பேரவைக் கட்டடத்துக்கு இடம் கூடத் தோ்வு செய்யப்படவில்லை. கையிருப்பு, வருவாய், நிலுவைத் தொகை என எதுவும் இடம்பெறவில்லை. எனவே, நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

தொழில்சாலைகள் வருவதற்கான சலுகைகள் இல்லை. மூடப்பட்ட ஆலைகள், நியாயவிலைக் கடைகள் திறப்பு குறித்து அறிவிப்பில்லை. ஆனாலும், புதுவை வளா்ச்சிக்கு முதல்வருடன் திமுக துணை நிற்கும் என்றாா் இரா.சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.