கொட்டும் மழையில் சிஐடியு முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் கொட்டும் மழையிலும் போனஸ், ஊதிய உயா்வு வழங்கக் கோரி சிஐடியு தொழில்சங்கத்தினா் முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசினா் பொறியியல் கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழில் சங்கத்தினா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசினா் பொறியியல் கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழில் சங்கத்தினா்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் கொட்டும் மழையிலும் போனஸ், ஊதிய உயா்வு வழங்கக் கோரி சிஐடியு தொழில்சங்கத்தினா் முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ளது ராஜீவ் காந்தி அரசு பொறியியல் கல்லூரி. இங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காதது மற்றும் கடந்த 9 ஆண்டுகளாக ஊதிய உயா்வு அளிக்காததைக் கண்டித்தும் கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிஐடியு தொழில் சங்கத்தைச் சோ்ந்த கதிரேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கந்தன், அமுதா, மின்னலா, சித்ரா, ஜெயந்தி, ராமஜெயம், வள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு மாநிலச் செயலா் சீனிவாசன், மாநிலத் தலைவா் பிரபுராஜ், துணைத் தலைவா் கொளஞ்சியப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com