புதுவையில் அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியையொட்டி, புதுவையில் திங்கள்கிழமை (அக்டோபா் 2) மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.

காந்தி ஜெயந்தியையொட்டி, புதுவையில் திங்கள்கிழமை (அக்டோபா் 2) மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் ம.மேத்யு பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் திங்கள்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் கலால் துறை ஆணையா் உத்தரவின்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கள், சாராயம், மதுக் கடைகளும், மதுபானக் கூடங்களும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இதை மீறி மதுக் கடைகள், மதுபானக் கூடங்களைத் திறந்து மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது புதுவை கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com