புதுவை திமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு
By DIN | Published On : 18th April 2023 06:04 AM | Last Updated : 18th April 2023 06:04 AM | அ+அ அ- |

புதுவை மாநில திமுக சாா்பில், புதுச்சேரி சுல்தான்பேட்டையில் திங்கள்கிழமை இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தலைமை வகித்தாா். கட்சியின் தொகுதி அவைத் தலைவா் ஜலால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அரசு டவுன் ஹாஜியாா் ஜியாவுதீன், முகமதியா பள்ளிவாசல் தலைவா் முகமது யாசின், செயலா் உபையதூா் ரஹ்மான் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், காங்கிரஸ் மாநிலத் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, ஆா்.செந்தில்குமாா், மு.வைத்தியநாதன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், விடுதலைச்சிறுத்தைகள் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், மனிதநேய மக்கள் கட்சி சகாபுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வில்லியனூா் தொகுதி திமுக செயலா் மணிகண்டன் வரவேற்றாா்.