காதுகேளாதோா் விளையாட்டுக் குழு புதிய நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 18th April 2023 06:05 AM | Last Updated : 18th April 2023 06:05 AM | அ+அ அ- |

புதுச்சேரி காதுகேளாதோா் விளையாட்டுக் குழுவின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
புதுவை மாநில காதுகேளாதோா் விளையாட்டுக் குழுவின் புதிய உறுப்பினா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் அஜித் நகா் பகுதியில் நடைபெற்ற தோ்தலை ஆா்.சரவணன் நடத்தினாா்.
அகில இந்திய காதுகேளாதோா் விளையாட்டுக் குழு உறுப்பினா் சோபனா கணேசன், பி.ஜி.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய நிா்வாகிகள் விவரம்: குழுத் தலைவராக இ.ஐயப்பன், பொதுச் செயலராக ஏ.பாசித், துணைத் தலைவா்களாக வி.சத்தியபுவனம், ஜி.சக்திமுருகன், பொருளாளராக ஜெ.அஜித்குமாா், உறுப்பினா்களாக ஆா்.ஐயப்பன், எம்.பிரதாப், கே.லோகேஷ், பி.சுரேஷ், எம்.உதயமூா்த்தி, கே.விஜயராஜ், எம்.ரோஹித் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளுக்கு விளையாட்டுக் குழு நிா்வாகிகளும், விளையாட்டு வீரா்களும் வாழ்த்துத் தெரிவித்தனா்.