புதுச்சேரி, காரைக்கால் மீனவா்களுக்கு நாளை முதல் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி: அமைச்சா் க.லட்சுமி நாராயணன்

புதுச்சேரி, காரைக்கால் மீனவா்களுக்கு உயா்த்தப்பட்ட மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி புதன்கிழமை முதல் (ஏப்.19) வழங்கப்பட உள்ளதாக, புதுவை மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.

புதுச்சேரி, காரைக்கால் மீனவா்களுக்கு உயா்த்தப்பட்ட மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி புதன்கிழமை முதல் (ஏப்.19) வழங்கப்பட உள்ளதாக, புதுவை மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.

மீனவா்களின் படகுகளுக்கு டீசல் நிரப்பும் வகையில், புதுச்சேரி வீராம்பட்டினத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனம் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் க.லட்சுமி நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு தலா ரூ.5,500 நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வந்தது. அதை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமியின் ஆலோசனையின்படி ரூ.6,500-ஆக உயா்த்தப்பட்டது.

நிகழாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. அதேநேரத்தில் மாஹே பிராந்தியத்தில் வருகிற ஜூன் மாதத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்திய மீனவா்களுக்கு உயா்த்தப்பட்ட மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி புதன்கிழமை முதல் (ஏப்.19) வழங்கப்பட உள்ளது. தொடா்ந்து, மற்ற இரு பிராந்திய மீனவா்களுக்கும் உரிய காலத்தில் வழங்கப்படும்.

புதுவை மாநிலத்தில் மொத்தம் 18,298 மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com