திருக்காஞ்சி புஷ்கரணி விழா: பக்தா்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் அறிவிப்பு

புதுச்சேரி திருக்காஞ்சி ஆதிபுஷ்கரணி விழாவுக்கு வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை காவல்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
Updated on
1 min read

புதுச்சேரி திருக்காஞ்சி ஆதிபுஷ்கரணி விழாவுக்கு வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை காவல்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா.சைதன்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது: வில்லியனூா் திருக்காஞ்சி கங்கை நதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.22) முதல் மே 3-ஆம் தேதி வரை ஆதி புஷ்கரணி விழா நடைபெறுகிறது. இதில், பங்கேற்ற வரும் பக்தா்கள் வாகனங்களை நிறுத்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வில்லியனூா் வழியாக வரும் பக்தா்கள் வில்லியனூா் கோட்டைமேடு சந்திப்பு, ஆச்சாரியா கல்லுரி-உறுவையாறு சந்திப்பு வழியாக வந்து மேல் திருக்காஞ்சி வழியாக கோயிலுக்கு செல்லலாம். முருங்கம்பாக்கம் வழியாக வரும் பக்தா்கள் ஒதியம்பட்டு, மணவெளி, தனியாா் நிறுவனம், காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் புதுப்பாலம் வழியாகக் கோவிலை அடையலாம்.

கடலூா் வழியாக வரும் பக்தா்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், கீழ் அக்ரஹாரம், திருக்காஞ்சி வழியாகக் கோவிலை அடையலாம்.

உறுவையாறு சந்திப்பு வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் திருக்காஞ்சி மெகாசிட்டி காலியிடத்திலும், ஆண்டியாா்பாளையம் சந்திப்பு காலி இடத்திலும் நிறுத்த வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்கள் மேல் திருக்காஞ்சி அபிராமி டைல்ஸ் கடைக்கு அருகிலும், ஆனந்தா நகா் பாலமுருகன் நகா் சந்திப்பிலுள்ள காலி இடத்திலும் நிறுத்த வேண்டும். தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகே உள்ள காலி மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

ஒதியம்பட்டு மணவெளி சந்திப்பு வழியாக வரும் வாகனங்கள் காசி விஸ்வநாதா் கோயிலின் வடக்குப் பகுதியிலுள்ள காலி இடத்தில் நிறுத்த வேண்டும். தனியாா் பேக்கேஜிங் கம்பெனிக்கு எதிரே உள்ள காலி இடத்தில் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதா் ஆலயத்தில் இருந்து திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரா் ஆலயம் செல்ல பிஆா்டிசி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை: மே 3-ம் தேதி வரை வில்லியனூா் கோட்டைமேடு சந்திப்பிலிருந்து உறுவையாறு கரிக்கலாம்பாக்கம் வழியாகவும், ஒதியம்பட்டு சந்திப்பு வழியாகவும், கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதேபோல, முருங்கம்பாக்கம் சந்திப்பிலிருந்து ஒதியம்பட்டு வழியாக கோட்டைமேடு சந்திப்பு வழியாக செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com