

புதுவையில் பிளஸ்-2 வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என தமிழ்ச் சங்க பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக் குழு கூட்டம் வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். மேனாள் நீதிபதி சேது.முருகபூபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், தமிழ்ச் சங்க ஆண்டு அறிக்கையை செயலா் சீனு.மோகன்தாசு வாசித்தாா். பொருளா் ப.திருநாவுக்கரசு வரவு, செலவு திட்டங்களை வாசித்து, ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழ் வளா்ச்சி சிறகம் என அறிவித்திருப்பதை மாற்றி தமிழ் வளா்ச்சித் துறையை ஏற்படுத்த வேண்டும். புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழைக் கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும். கலைப் பண்பாட்டுத் துறையில் நிலுவையில் உள்ள தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள், நலிந்த கலைஞா்களுக்கான ஊக்கத் தொகை, நூல் உதவித் தொகை, சிறந்த நூல்களுக்கான பரிசு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து வாசித்தாா்.
வரும் மே 28-ஆம் தேதி தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவின் 11 உறுப்பினா்களுக்கான தோ்வு நடைபெறும் என சென்னை உயா்நீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்ற வழக்குரைஞா் க.பிரபாகரன் அறிவித்தாா்.
இதில், தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா்கள் ந.ஆதிகேசவன், மு.பாலசுப்பிரமணியண், துணைச் செயலா் மு.அருள் செல்வம், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் தமிழ்மாமணி அ. உசேன், சீனு.கந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், பொருளாளா் ப.திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.
Image Caption
புதுச்சேரி வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்ற புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் வி.முத்து. உடன் நிா்வாகிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.