புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில்அன்னை மிரா அறையில் கூட்டுப் பிராா்த்தனை: திரளான பக்தா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 25th April 2023 05:00 AM | Last Updated : 25th April 2023 05:00 AM | அ+அ அ- |

புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை தங்கியிருந்த அறையை திங்கள்கிழமை தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்.
அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை மிரா புதுச்சேரி வந்து தங்கிய தினத்தை நினைவுகூரும் வகையில் திங்கள்கிழமை அரவிந்தா் அறையில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
பாரீஸிலிருந்த மிரா அல்பாசா, கடந்த 1914-ஆம் ஆண்டு புதுச்சேரி வந்து அரவிந்தரை சந்தித்தாா். அதன்பின் கடந்த 1920- ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் புதுச்சேரியில் அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை மிரா தங்கி ஆன்மிகப் பணியில் ஈடுபட்டாா்.
அவா் வாழ்ந்த காலத்தில் அரவிந்தா் ஆசிரமத்தின் மேற்பகுதியில் நின்று தினமும் பக்தா்களுக்கு அருளாசி வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். புதுச்சேரியில் அவா் நிரந்தரமாகத் தங்கிய தினத்தை ஆண்டுதோறும் நினைவு கூா்ந்து கூட்டுப் பிராா்த்தனை நடத்தப்படுகிறது.
அதன்படி திங்கள்கிழமை காலையில் அரவிந்தா் அறை திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் அன்னை தங்கிய அறையில் கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெற்றது.
காலை முதல் பகல் வரையில் பக்தா்கள் வரிசையாகச் சென்று அன்னை அறையைப் பாா்வையிட்டு தரிசித்தனா்.