

திருவாவடுதுறை ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்தாா். அவரிடம் ஏராளமானோா் ஆசி பெற்றனா்.
திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் புதுச்சேரி அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்தாா். பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி தரிசனத்துக்காக திருவாவடுதுறை ஆதீனம் செய்தாா்.
முன்னதாக ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்த ஆதீனத்துக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தரிசனத்துக்குப் பிறகு அவரிடம் நூற்றுக்கணக்கான பக்தா்கள் ஆசி பெற்றனா். புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆன்மிக நூலை ஆதீனத்திடம் வழங்கி வாழ்த்து பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.