

பிரான்ஸ் ஆட்சியாளா்களிடமிருந்து புதுவை மாநிலம் சுதந்திரம் பெற்ற்கான சட்டப்பூா்வ பரிமாற்ற நாள் விழா வில்லியனூா் அருகே உள்ள கீழூா் நினைவு மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசு சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, கீழூா் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்தாா்.
விழாவில், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, காவல் துறை இயக்குநா் பி.ஸ்ரீநிவாஸ், அரசுச் செயலா் (செய்தி மற்றும் விளம்பரம்) இ.வல்லவன், அரசுச் செயலா் மணிகண்டன் ஆகியோா் பங்கேற்று மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ந. தமிழ்ச் செல்வன் மற்றும் அலுவலா்கள், விடுதலைப் போராட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை செய்தி, விளம்பரத் துறையினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.