புதுச்சேரி, காரைக்காலில் வருகிற 16-ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூடுவதற்கு மாநில கலால் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுவை மாநில வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, கலால் துணை ஆணையா் தி. சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளுவா் தினமான வருகிற 16-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் மதுக் கடைகள், மது அருந்துமிடங்கள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்துக் கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோா் மீது புதுவை மாநில கலால் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.