பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

புதுச்சேரி கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற புதுச்சேரி முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பாராட்டி கௌரவித்த அதன் தாளாளா் மருத்துவா் ரத்தின ஜனாா்த்தனன். உடன் பள்ளி நிா்வாகி சுந்தர்ராஜன்.

பள்ளித் தாளாளா் ரத்தின ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலா் கராத்தே சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றாா்.

பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற பிளஸ் 2 மாணவி பிரியங்கா (583), பிளஸ் 1 மாணவா் வருண் (539), பத்தாம் வகுப்பு மாணவி ஹேமாவதி (479) ஆகியோரை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பிளஸ் 1 வகுப்பில் கட்டணச் சலுகையும் அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com