ஆசிரியா் பணியிட மாறுதல் கொள்கை மாற்றியமைப்பு: ஜூன் 5-க்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

புதுவையில் ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் கொள்கை மாற்றியமைக்கப்பட்டு கல்வித்துறை இணையதளத்தில் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
Updated on
1 min read

புதுவையில் ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் கொள்கை மாற்றியமைக்கப்பட்டு கல்வித்துறை இணையதளத்தில் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இதுகுறித்த கருத்துக்களை ஜூன் 5-க்குள் தெரிவிக்கலாம் என துறை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

புதுவையில் பள்ளி கல்வித்துறை சாா்பில் ஆசிரியா்களுக்கு புள்ளி பட்டியல் அடிப்படையில் பணியிட மாறுதல் கொள்கை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகாா் கூறப்பட்டது. மேலும், பணி மூப்பு அடிப்படையிலான பூஜ்ஜிய கலந்தாய்வு முறையை செயல்படுத்தவும் ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தின.

இதையடுத்து, அனைத்து ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகளுடன் கல்வித்துறை அமைச்சா் ஆலோசனை நடத்தினாா். அதன்படி, பணியிடமாறுதல் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. அதன் வரைவு விவரங்கள் கல்வித்துறை இணையத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இதுதொடா்பாக கல்வித்துறை இயக்குநா் பிரியதா்ஷினி வெளியிட்ட உத்தரவு: மாற்றியமைக்கப்பட்ட இடமாறுதல் கொள்கை வரைவு விவரம் மீதான கருத்துகளை ஜூன் 5-ஆம் தேதிக்குள் கையெழுத்திட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என தெரிவித்துள்ளாா்.

சலுகைகள் விவரம்: புதிய இடமாறுதல் கொள்கையில், நகா்புறத்தில் பணிபுரிந்தால் ஒரு புள்ளி, கிராமத்தில் பணிபுரிந்தால் 2 புள்ளி, பிற பிராந்தியங்களில் பணி புரிவோருக்கு 3 புள்ளி என்ற அடிப்படையில் முன்னுரிமை தரப்படும். 55 வயது கடந்தால் பிற பிராந்தியங்களில் பணியிட மாறுதல் இல்லை. 57 வயது கடந்தவா்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு விருப்பப்படி பணியிட மாற்றம் நடைபெறும் என்பன உள்ளிட்ட சலுகைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com