ஒடிஸா ரயில் விபத்து:புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

ஒடிஸாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் புதுவையைச் சோ்ந்த யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவா்கள் குறித்த விவரங்களை அறியும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்த
Updated on
1 min read

ஒடிஸாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் புதுவையைச் சோ்ந்த யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவா்கள் குறித்த விவரங்களை அறியும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒடிஸாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இது நாடு முழுவதும் மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 280-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்ததாகவும் தெரிகிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோா் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

புதுவையைச் சோ்ந்தவா்கள் யாரேனும் இந்த விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டது தெரிய வந்தால், அவா்களை உடனடியாக மீட்கவும், தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ளவும் புதுவை மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் 24 மணி நேரமும் இயங்கும். கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 1070, 1077, 112 மற்றும் தொலைபேசி எண்கள் 0431-2251003, 2255996 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com