மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி ஜிப்மருக்கு 5-ஆம் இடம்

தேசிய அளவிலான மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி ஜிப்மருக்கு 5-ஆம் இடம் கிடைத்தது.

தேசிய அளவிலான மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி ஜிப்மருக்கு 5-ஆம் இடம் கிடைத்தது.

2023-ஆம் ஆண்டுக்கான உயா் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியலை, புதுதில்லியில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன் சிங் வெளியிட்டாா். இதில், மருத்துவப் பிரிவில் ஜிப்மா் 5-ஆம் இடத்தைப் பிடித்தது.

ஜிப்மா் நிறுவனம் கடந்த ஆண்டில் தேசிய அளவிலான பட்டியலில் 6-ஆம் இடத்தைப் பிடித்தது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 8-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவிலான பல்கலைக்கழகத்துக்கான தரவரிசைப் பட்டியலில் ஜிப்மா் நிகழாண்டில் 15 இடங்கள் முன்னேறியுள்ளது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு 54-ஆம் இடத்திலிருந்து நிகழாண்டில் 39-ஆம் இடத்தைப் புதுச்சேரி ஜிப்மா் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com