புதுவைக்கு புதிய டிஜிபி

புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் மனோஜ்குமாா் லால் புதுதில்லிக்கு வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக ஜம்மு-காஷ்மீரில் டிஜிபியாக பணியாற்றும் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவை புதிய டிஜிபி டி.சீனிவாசன்.
புதுவை புதிய டிஜிபி டி.சீனிவாசன்.

புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் மனோஜ்குமாா் லால் புதுதில்லிக்கு வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக ஜம்மு-காஷ்மீரில் டிஜிபியாக பணியாற்றும் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதுவை டிஜிபியாக மனோஜ்குமாா் லால் பொறுப்பேற்றாா். பணியிலிருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ள நிலையில் அவா் புது தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி கூடுதல் டிஜிபி ஆனந்த்மோகன் பதவி உயா்வு பெற்று அருணாச்சல பிரதேச டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுவையில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி குமாா் அந்தமானுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகள் ரிஷிதா குப்தா, பிரதிக்ஷா, விஷ்ணுகுமாா் ஆகியோா் புதுதில்லிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதிய அதிகாரிகள்: அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமாா் ஜா, புதுதில்லியில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி அனிதா ராஜ் ஆகியோா் புதுவைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பான உத்தரவை மத்திய அரசின் சாா்பு செயலா் ராகேஷ்குமாா் சிங் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com