கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து விசாரணைக்கு பிறகே கருத்து கூறமுடியும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து, தமிழகம், புதுவையில் நடைபெறும் விசாரணை முடிவுகள் தெரிந்த பிறகே கருத்து கூற முடியும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து, தமிழகம், புதுவையில் நடைபெறும் விசாரணை முடிவுகள் தெரிந்த பிறகே கருத்து கூற முடியும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ரங்கசாமி கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி முதலாண்டு மாணவா்கள் வரையிலான தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கு கரோனா கால பிரச்னைகளே காரணமாக உள்ளன. ஆனாலும், தேசிய அளவில் புதுவையின் கல்வி, சுகாதாரத் துறை செயல்பாடு சிறப்பாக உள்ளது. வருங்காலங்களில் பள்ளி, கல்லூரிகளில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசு முயற்சி மேற்கொள்ளும்.

புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் பணியிடமாற்றம் செய்யப்பட்டது நிா்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட்டதாகும். தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு புதுச்சேரியிலிருந்து கடத்தப்பட்ட சாராயம்தான் காரணம் என்ற புகாா் குறித்து தமிழக அரசும் விசாரணை நடத்துகிறது. அதேபோல, புதுவையிலும் விசாரணை நடைபெறுகிறது. இரு விசாரணைகளும் முடிந்து, அவற்றின் முடிவுகள் தெரிந்த பிறகே கருத்துகூற முடியும்.

தற்போது, புதுச்சேரியில் சாராயம் கடத்தல் தொடா்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதுவை கலால் துறை கடந்தாண்டு ரூ.1,330 கோடிக்கு வருவாய் ஈட்டித் தந்தது.

புதுவை சட்டப்பேரவையில் அரசு அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றாா் முதல்வா்.

பேட்டியின்போது, மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com