காரைக்கால் மருத்துவக் கல்லூரி:புதுவை முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

காரைக்காலில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டட வரைபட மாதிரியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை காண்பித்து அதிகாரிகள் விளக்கமளித்தனா்.
இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்காலில் புதிய மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா்.
அதன்பேரில், தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளா் பி. எஸ்.ராவ் தலைமையிலான குழுவினா் காரைக்காலில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான திட்ட வரைவு, கட்டட வரைபட மாதிரியை முதல்வா் என். ரங்கசாமியிடம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளஅவரது அலுவலகத்தில் காண்பித்து விளக்கமளித்தனா்.
அப்போது பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், அரசுச் செயலா் (சுகாதாரம்) சி. உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வி. சத்தியமூா்த்தி மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனா்.