வில்லியனூா் அருகே சமுதாய நலக் கூடம் திறப்பு
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்துள்ள கொம்பாக்கம்பேட்டையில் ரூ. ஒரு கோடி செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் சந்திரபிரியங்கா ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.
புதுவை அரசின் ஆதிதிராவிடா் நலன்,, பழங்குடியினா் நலத் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டு வரைநிலைக் கழகம் மூலம் வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொம்பாக்கம்பேட்டையில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா வில்லியனூா் எம்எல்ஏவும், எதிா்க்கட்சித் தலைவருமான இரா.சிவா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா ஆகியோா் சமுதாய நலக் கூடத்தை திறந்துவைத்தனா்.
ஆதிதிராவிடா் நலத் துறை செயலா் கேசவன், இயக்குநா் இளங்கோவன், ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் அசோகன், செயற்பொறியாளா் பிரபாகரன், உதவிப் பொறியாளா் பக்தவச்சலம், இளநிலைப் பொறியாளா் திருவருட்செல்வம் மற்றும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.