புதுச்சேரி: விஷ சாராயம் கடத்தலில் சிபிசிஐடி விசாரணைஇந்திய கம்யூனிஸ்ட்டு வலியுறுத்தல்

புதுச்சேரியில் விஷ சாராய கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளா் அ.ம.சலீம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் விஷ சாராய கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளா் அ.ம.சலீம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் கட்சி அலுவலகத்தில் அ.மு.சலீம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளித்திருப்பதாக பாஜக வினா் பொய்யானத் தகவல்களை பரப்பி வருகின்றனா். கூடுதல் நிதியில் ரூ.28 கோடி ஜல்சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனா். ஆனால் நகரப் பகுதியில் கூட குடிநீா் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

ஊழல் காரணமாக புதுவையில் திறன்மிகு திட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. முதல்வா் அறிவித்த குடும்பத் தலைவிக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் விதவைகள், மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், மீனவப் பெண்கள் உள்ளிட்ட யாரும் பயனடைய முடியவில்லை. கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருள்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் விஷசாராயம் குடித்து 22 போ் உயிரிழந்ததற்கு புதுவைதான் காரணம் என கூறப்படுகிறது. சாராயக் கடத்தலின் ஊற்றுக் கண்ணாக புதுவை திகழ்வதால் விஷசாராயக் கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். பத்திரப்பதிவு துறையில் ஊழல் தலை விரித்தாடுகிறது. நில அபகரிப்புக்கு பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனா்.

மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் நிா்வாக அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இந்தச் சட்டம் அனைத்து யூனியன் பிரதேசங்களுக்குமானது என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வா் என்.ரங்கசாமி செயல்படவேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், ஏஐடியுசி பொதுச்செயலாளா் கே.சேதுசெல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com