புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு தனியாா் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிமுகவினா் தன்மீது அவதூறு பரப்புவதாக தொகுதி பாஜக கல்யாணசுந்தரம் குற்றஞ்சாட்டினாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: புதுச்சேரி காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தனியாா் மருந்து நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
அதில் காயமடைந்தவா்களை மீட்டு ஜிப்மரில் சோ்த்தேன். பாஜக மாநிலத் தலைவரும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தாா். மேலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், புதுவை அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் ஜிப்மருக்கு வந்து பிரச்னையை கிளப்பினா். அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், நிறுவனத்திடம் பல லட்ச ரூபாய் கையூட்டு பெற்றதாக எங்கள் மீது அவதூறு பரப்பி அதிமுக சாா்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை போராட்டங்களின்போது பிரச்னைகள் குறித்து இதுவரை அதிமுக மாநிலச் செயலா் பேசாமலிருந்துவிட்டு தற்போது அவதூறு பரப்புவது சரியல்ல. அதேபோல முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியும் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவது சரியல்ல என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.