புதுச்சேரி: பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் போரை நிறுத்தக் கோரியும், அமைதிக்காக இந்தியா தலையிடக் கோரியும் மாா்க்சிஸ்ட் சாா்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக புதிய பேருந்து நிலையம் அருகே தியாகி வ.சுப்பையா சிலையிலிருந்து ஊா்வலமாகச் சென்று சாரத்தில் உள்ள ஜீவா சிலையை அடைந்தனா். அங்கு நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் ஆா். ராஜாங்கம் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் தா. முருகன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூா்த்தி, சத்தியா, விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் சங்கா், ஜனநாயக வாலிபா், மாதா் சங்கம், மாணவா் சங்கத் தலைவா்கள் ஆனந்த், இளவரசி, பிரவீன்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.