

புதுச்சேரி திம்புநாயக்கன்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசார தொடக்க விழாவில், பயனாளிக்கு இலவச சமையல் எரிவாயு உருளை மற்றும் அடுப்பு வழங்கிய துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
புதுச்சேரி, நவ. 20: மத்திய அரசு உதவியுடன் புதுவை மாநிலத்தில் அனைத்துத் திட்டங்களும் முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்தப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
புதுச்சேரி அருகேயுள்ள திம்மநாயக்கன்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு வாகன பிரசாரத் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து முதல்வா் பேசியது:
அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேற வேண்டும் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் எண்ணமாகும். உலகளவில் நமது தலைசிறந்ததாகவும், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இந்தியா விளங்குவதற்காகவே மத்திய அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. புதுவை மாநிலத்திலும் மத்திய அரசின் உதவியுடன் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தும்போதுதான் அவை முழுமையாக மக்களிடையே சென்றடையும். வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதியுடன், புதுவை அரசும் கூடுதல் நிதியை அளிப்பதால் மக்கள் முழுமையாகப் பயனடைந்துவருகின்றனா்.
ஆதிதிராவிட மாணவா்களுக்கான சிறப்புக் கூறு நிதியை முழுமையாகச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே அந்தப் பிரிவு மாணவா்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றில் தோ்ச்சி பெற உரிய பயிற்சிகளைப் பெற முன்வரவேண்டும்.
பழங்குடியின மக்களை புதுவையில் தேடிக் கண்டறிந்து அவா்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தியதால் தற்போது அவா்களின் குழந்தைகள் கல்லூரிகளில் படிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அனைத்து கிராமங்களைச் சோ்ந்த மக்களும் மேம்பாடு அடையும் வகையில் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான உறுதிமொழியை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாசிக்க, அதை முதல்வா் ரங்கசாமி உள்ளிட்ட அனைவரும் ஏற்றனா்.
மத்திய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்திய சாதனையாளா்கள் மற்றும் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிரதமரின் இலவச சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட 17 திட்டங்களுக்கான உத்தரவை பயனாளிகளுக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் வழங்கினா். ‘விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக,புதுச்சேரி ஆட்சியா் இ.வல்லவன் வரவேற்றாா். முடிவில், உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல் நன்றி கூறினாா்.
Image Caption
புதுச்சேரி திம்புநாயக்கன்பாளையம் அரசு பள்ளி
வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை
ஏற்படுத்தவும், விடுபட்ட திட்டப் பயனாளிகளை சோ்க்கவும் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் நிகழ்ச்சியில் இலவச
சமையல் எ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.