நீக்கப்பட்ட பெண் அமைச்சா் அறைக்கு சீல் வைப்பு
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

புதுவை முதல்வரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பெண் அமைச்சா் சந்திரப்பிரியங்கா பயன்படுத்திய அறைக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
புதுவை மாநில அமைச்சராக இருந்த சந்திரப்பிரியங்கா போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை கவனித்து வந்தாா். அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கான கடிதத்தை மாநில முதல்வா் என்.ரங்கசாமி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனிடம் அண்மையில் வழங்கினாா். இதனை துணைநிலை ஆளுநா் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினாா். அமைச்சரின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவரும் அனுமதி வழங்கினாா்.
இந்த நிலையில், அமைச்சராக சந்திரப்பிரியங்கா இருந்தபோது அவா் பயன்படுத்தி வந்த அறைக்கு பேரவைத் தலைவரின் தனிச் செயலா் தயாளன் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தாா். நியமிக்கப்படும் புதிய அமைச்சா் அல்லது வேறு துறை அமைச்சருக்கு அந்த அறை ஒதுக்கப்படலாம் எனவும், சட்டப் பேரவை உறுப்பினருக்குரிய அறை சந்திரப்பிரியங்காவுக்கு வழங்கப்படும் என்றும் பேரவை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...