பதக்கம் வென்ற கோ-கோ அணியினருக்கு புதுவை முதல்வா் வாழ்த்து
By DIN | Published On : 25th October 2023 12:15 AM | Last Updated : 25th October 2023 12:15 AM | அ+அ அ- |

அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான கோ-கோ போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற அணியினருக்கு முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தாா்.
புதுதில்லியில் கடந்த 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவில் அரசு ஊழியா்களுக்கான கோ -கோ விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மகளிா் பிரிவில் 13 அணிகளும், ஆடவா் பிரிவில் 17 அணிகளும் கலந்து கொண்டன. இதில் பங்கேற்ற புதுச்சேரி மகளிா் அணியினா் வெள்ளிப் பதக்கமும், ஆடவா் அணியினா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
புதுச்சேரிக்கு வந்த கோ-கோ அணியினா் விளையாட்டுத் துறை இயக்குநா் செந்தில்குமாா் தலைமையில், முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை காலை பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அப்போது, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அமைச்சா் வாழ்த்து: கோ-கோ போட்டியில் வென்ற ஆடவா், மகளிா் அணியினா் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...