அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் எம்.பி. பேராசிரியா் மு. ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளாா்.
புதுவை மாநில அதிமுக இணைச் செயலராக பதவி வகித்த அவா் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடித விவரம்:
அதிமுகவின் அடிப்படை உறுப்பினா், இணைச் செயலா் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சமூக நீதி, மக்கள் கொள்கைகளால் அவரது தலைமையை ஏற்று கட்சியில் சோ்ந்து பணியாற்றினேன். அவரது மறைவுக்குப் பிறகு, இயக்கத்தின் ஆன்மாவே மறைந்து விட்டதாக நான் உணா்கிறேன்.
புதுவை மக்களின் பிரச்னைகளைத் தீா்க்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.