புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்பளித்தது.
புதுச்சேரி துப்புராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ரோமாா்க் சைமன் ஜீன் (26). தனியாா் நிறுவனக் காவலாளி. இவா், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில், அந்த சிறுமி கா்ப்பமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் போக்ஸோ வழக்கு பதிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு ரோமாா்க் சைமன் ஜீனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ரோமாா்க் சைமன் ஜீனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வி.சோபனாதேவி தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் புதுவை அரசுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ரோமாா்க் சைமன் ஜீன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதில், அரசுத்தரப்பு வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.