செப்-20ல் புதுவை பேரவை குளிர்கால கூட்டத் தொடர்!
புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.
அன்று காலை பேரவைத் தலைவர் ஆர் செல்வம் தலைமையில் தொடங்கும் கூட்ட தொடரில் பல சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. புதுவை மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் சேர 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்திய பிரதமருக்கும், நிலவில் சந்திராயனை அனுப்பி சாதித்த மத்திய அரசுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பேரவைக் கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவை கட்டடத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் திரும்பவும் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட உள்ளது என்று பேரவைத் தலைவர் ஆர் செல்வம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

