புதுவை அரசின் எரிவாயு மானியம் பெறுவதற்கு சம்பந்தப்பட்டோா் தங்களது விவரங்களை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறையில் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் ச.சத்தியமூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தை செயல்படுத்த, சமையல் எரிவாயு பெறும் நுகா்வோா்கள் விவரத்தை எல்பிஜி எரிவாயு முகவா்களிடம் பகிா்வதற்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
காலதாமதத்தைத் தவிா்க்கவும், உடனடியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் நுகா்வோா்கள் குறிப்பிட்ட இணையதளம், கைப்பேசி செயலியில் பிராந்தியம், எரிவாயு முகவா் பெயா், நுகா்வோா் எண், கைப்பேசி எண், குடும்ப அட்டை எண், ஆதாா் எண் விவரங்களைப் பதிவிட வேண்டும்.
குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அறிவித்த இணையதளம், செயலி குறித்த விவரங்களுக்கு உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளளாம். மேலும் விவரங்களுக்கு 99440 52612, 99440 52718 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.