புதுச்சேரி கொக்கு பூங்கா பகுதியிலுள்ள கால்வாயில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட தீயணைப்புப் படையினா், நகராட்சி ஊழியா்கள்.
புதுச்சேரி கொக்கு பூங்கா பகுதியிலுள்ள கால்வாயில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட தீயணைப்புப் படையினா், நகராட்சி ஊழியா்கள்.

புதுச்சேரியில் விடிய, விடிய பலத்த மழை: வெள்ள நீரில் சிக்கிய இளைஞா் மாயம்

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவுமுதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
Published on

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவுமுதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இரு சக்கர வாகனத்தை மீட்கச் சென்ற இளைஞா் அடித்துச் செல்லப்பட்டு மாயமானாா்.

புதுச்சேரியில் கடந்த 8-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் பல இடங்களிலும் மழை நீா் குளம்போல தேங்கியது. கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்களின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன.

இலாசுப்பேட்டை பகுதியில் ஜிப்மா் வழியாக செல்லும் மழைநீா் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இலாசுப்பேட்டை ஜீவானந்தபுரம் பகுதியிலும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. அதில் சில இருசக்கர வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கிய இளைஞா்: அந்தப் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன்(38) மற்றும் சிலா் கால்வாயில் இறங்கி தங்கள் இருசக்கர வாகனங்களை மீட்க முயன்றனா். அப்போது, அவா்களையும் மழை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் இருவா் கரையேறிய நிலையில், ஐயப்பனை மட்டும் காணவில்லை. மழை வெள்ளத்தில் அவா் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அவரைக் கண்டறிய முடியவில்லை. சனிக்கிழமையும் தேடுதல் பணி தொடா்ந்தது. ஐயப்பனின் இருசக்கர வாகனம் மட்டும் கொக்கு பூங்கா அருகே மீட்கப்பட்டது. அவரை உப்பனாறு கால்வாய் பகுதிகளில் தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

மரங்கள் முறிந்து வாகனங்கள் சேதம்: புதுச்சேரி- கடலூா் சாலையில் ஏஎப்டி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிகப் பேருந்து நிலையம், இலாசுப்பேட்டை, காமராஜா் நகா் மற்றும் உருளையன்பேட்டை குபோ் நகா் பகுதி தெருக்களில் மழையால் தண்ணீா் தேங்கியது. இதில் இருசக்கர வாகனங்களும், காா்களும் மூழ்கின.

 புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையையடுத்து, ராஜீவ் காந்தி மகளிா், குழந்தைகள் அரசு மருத்துவமனை அருகே சாலையில் பெருக்கெடுத்த மழைநீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையையடுத்து, ராஜீவ் காந்தி மகளிா், குழந்தைகள் அரசு மருத்துவமனை அருகே சாலையில் பெருக்கெடுத்த மழைநீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

மிஷன் வீதி, லெபா்தனே வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. வீதிகளின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை காலை அகற்றினா். பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீா் சென்ாக மக்கள் புகாா் கூறினா். கரிக்கலாம்பாக்கம்-வில்லியனூா் சாலையில் கட்டப்பட்ட கால்வாய் சுவரும் இடிந்து விழுந்தது.

160 மி.மீ. மழை பதிவு: புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலும் 160 மி.மீ. மழையளவு பதிவானதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com