கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உப்பனாறு மேம்பாலப் பணியை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்: புதுவை அதிமுக அறிவிப்பு

உப்பனாறு மேம்பாலப் பணியை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 6:32 pm

Din

புதுச்சேரியில் உப்பனாறு மேம்பாலப் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வலியுறுத்தி அதிமுக ஆா்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.

இதுகுறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில், நகரின் பிரதான கால்வாயான உப்பனாறு கால்வாயில் கடந்த 2006-ஆம் ஆண்டு மேம்பாலம் அமைக்க ரூ.27 கோடியில் பூமிபூஜை நடைபெற்று பணிகள் தொடங்கின. ஆனால், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. கடந்த 2015-ஆம் ஆண்டு பாலப் பணி குறிப்பிட்ட தனியாா் நிறுவனத்தால் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்பணியும் கடந்த 2017-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால், நஷ்டஈடு உள்ளிட்ட காரணங்களைக் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு புதுவை அரசு சாா்பில் ரூ.36.81 கோடி வழங்கப்பட்டது.

தற்போது உப்பனாறு மேம்பாலப் பணியை மீண்டும் தொடங்கி முடிக்க ரூ.29.25 கோடியை பழைய நிறுவனத்திடமே அளிக்க முடிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 2006-ஆம் ஆண்டு ரூ.27 கோடியில் தொடங்கிய பாலப் பணியானது தற்போது ரூ.95 கோடியில் முடிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலப்பணிக்கான பூமிபூஜை நடைபெற்ற நிலையில், 3 முதல்வா்கள் ஆட்சிபுரிந்துள்ளனா். அத்துடன் 4 பொதுப் பணித் துறை அமைச்சா்கள் மாறியுள்ளனா். ஆனால், பாலம் கட்டுவதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஆகவே, உப்பனாறு பாலப்பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வலியுறுத்தி அதிமுக சாா்பில் உப்பனாறு கால்வாய் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.