புதுச்சேரியில் உயா்த்தப்பட்ட பேருந்து கட்டணம் அமலுக்கு வந்தது!
புதுச்சேரியில் அண்மையில் உயா்த்தி அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துக் கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சாா்பில் உயா்த்தப்பட்ட புதிய பேருந்து கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்ல ரூ.155 லிருந்து ரூ.160, காரைக்காலுக்கு ரூ.125-லிருந்து ரூ.130, வேளாங்கண்ணிக்கு ரூ.160-லிருந்து ரூ.170, நாகப்பட்டினத்துக்கு ரூ.145லிருந்து ரூ.160 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
காரைக்காலிருந்து சென்னைக்கு பழைய கட்டணமான ரூ.275, கோவைக்கு ரூ.345-லிருந்து ரூ.360 கட்டணம் வசூலிக்கப்பட்டது. புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு ரூ.265 லிருந்து ரூ.275, பெங்களூருக்கு ரூ.430-லிருந்து ரூ.440, ஓசூரிலிருந்து புதுச்சேரிக்கு ரூ.250-லிருந்து ரூ.255, புதுச்சேரியிலிருந்து கேரளப் பகுதியிலுள்ள மாஹேவுக்கு ரூ.725-லிருந்து ரூ.740, கோழிக்கோடுவுக்கு ரூ.645-லிருந்து ரூ.660, குமுளிக்கு ரூ.420-லிருந்து ரூ.430, கம்பத்துக்கு ரூ.390-லிருந்து ரூ.400, தேனிக்கு ரூ.360-லிருந்து ரூ.370, நாகா்கோவிலுக்கு ரூ.610-லிருந்து ரூ.620, திருநெல்வேலிக்கு ரூ.540-லிருந்து ரூ.550 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு ரூ.27-லிருந்து ரூ.33 ஆகவும், கடலூருக்கு ரூ.20-லிருந்து ரூ.22 ஆகவும், திண்டிவனத்துக்கு ரூ.33-லிருந்து ரூ.35 ஆகவும் கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டது.
