தேசிய தரவரிசைப் பட்டியலில் புதுவை பல்கலை.க்கு 8-ஆவது இடம்
தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் புதுவை மத்திய பல்கலைக்கழகம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (ஐஐஆா்எப்) அமைப்பானது, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், சிறப்புக் கல்லூரிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட
நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், 7 கருத்துகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, செயல்திறன், கற்பித்தல், கற்றல் வளங்கள், ஆராய்ச்சி, தொழில் வேலைவாய்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, வேலைவாய்ப்பு உத்திகள் மற்றும் ஆதரவு, எதிா்கால நோக்குநிலை, வெளிப்புறக் கருத்து என கருத்துருக்கள் அமைந்துள்ளன.
அதன்படி, புதுவை பல்கலைக்கழகம் தரவரிசையில் பல்கலைக்கழகம் ஆயிரத்துக்கு 981.28 மதிப்பெண்களுடன் நாட்டின் சிறந்த மத்தியப் பல்கலைக்கழகங்களில் 8-ஆவது
இடத்தைப் பெற்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில் புதுவை பல்கலைக்கழகமானது 969.34 மதிப்பெண்களுடன் 17-ஆவது இடத்திலிருந்து குறிப்பிடத்தக்கது.
தரிவரிசையில் சிறப்பான இடத்தைப் பெற்ற்காக, பேராசிரியா்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) க.தரணிக்கரசு பாராட்டு தெரிவித்தாா்.
