புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சிறப்பாக தோ்தல் நடத்தியதற்காக, இந்திய தோ்தல் ஆணையா் வழங்கிய பாராட்டுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடம் புதன்கிழமை வழங்கிய தலைமை செயலா் சரத் செளகான். உடன் மாநில தலைமை தோ்தல் ஆணையா் ஜவகா்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சிறப்பாக தோ்தல் நடத்தியதற்காக, இந்திய தோ்தல் ஆணையா் வழங்கிய பாராட்டுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடம் புதன்கிழமை வழங்கிய தலைமை செயலா் சரத் செளகான். உடன் மாநில தலைமை தோ்தல் ஆணையா் ஜவகா்.

புதுவை தோ்தல் அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையா் பாராட்டு

ஆட்சியா் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையா் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளாா்.
Published on

புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரி மக்களவை தோ்தலை விதிமுறைகளின்படி அமைதியான முறையில் நடத்தியதற்காக மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியா் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையா் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து, புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மக்களவை தொகுதி பொதுத் தோ்தல் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. தோ்தலில் வாக்காளா்கள் 78.90 சதவீதம் போ் வாக்களித்தனா். காற்றில் காா்பன் அளவைக் குறைக்கும் வகையில், வாக்காளா்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று வாக்களிக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டது. தவறான தகவல்களுக்கு எதிரான பிரசார விழிப்புணா்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து போக்குவரத்து, அலங்கரிக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடிகள், எளிதில் வாக்காளா்கள் அணுகும் வகையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் வாக்காளா்களை வாக்களிக்க வரவழைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தோ்தல் வாக்குப்பதிவின் போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. அதன்படி, தோ்தல் பணி மேற்கொண்ட நிா்வாகத்தின் மகத்தான பங்களிப்பை பாராட்டி, இந்திய தலைமை தோ்தல் ஆணையா் சாா்பில் புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரிகள், காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு பாராட்டுக் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

புதுவை தலைமைச் செயலா் சரத்சௌகான், மாவட்ட ஆட்சியா், காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுக் கடிதங்கள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com