தமிழக எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்பனை: சுயேச்சை எம்எல்ஏ புகாா்

தமிழக எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்பனை: சுயேச்சை எம்எல்ஏ புகாா்

Published on

புதுவை, தமிழக எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்கப்படுவதாக திருபுவனை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக ஆதரவு சுயேச்சை உறுப்பினா் அங்காளன் காவல் துறை தலைமை இயக்குநரிடம் புதன்கிழமை புகாரளித்தாா்.

புதுச்சேரி மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் புதுவை முதல்வா், உள் துறை அமைச்சா் மீது விமா்சனங்களை எழுப்பி வருகின்றனா். புது தில்லி சென்று பாஜக தேசிய தலைவா்களிடமும் புதுவை முதல்வா் உள்ளிட்டோா் மீது எம்எல்ஏக்கள் புகாா் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், திருபுவனை தொகுதி சுயேச்சை உறுப்பினரும், பாஜக ஆதரவாளருமான அங்காளன் காவல் துறை தலைமை இயக்குநா் ஸ்ரீநிவாஸை சந்தித்து மனு அளித்தாா். அதில், புதுவை தமிழக எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்கப்படுவதாகவும், குறிப்பாக கடலூா், விழுப்புரம் எல்லையோரம் அமைந்துள்ள திருபுவனை தொகுதியில் தமிழகத்தை சோ்ந்தவா்களுக்கு, சட்ட விரோதமாக எரிசாராயம் கலந்த சாராயம் விற்கப்படுவதாகக் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com