கோப்புப்படம்
கோப்புப்படம்

மின்சாரம் பாய்ந்து தொழலாளி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதி, பிள்ளையாா்குப்பம் பேட் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (40), எலக்ரீஷியன். இவா், கிருமாம்பாக்கம் குரு நகா் பகுதியில் ஒரு வீட்டில் மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

வேல்முருகனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸில் அவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com