காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: புதுச்சேரி ஆட்சியா் வழங்கினாா்
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகத்தை புதுச்சேரி ஆட்சியா் வழங்கினாா்.
காசநோயில்லா நிலையை உருவாக்கும் வகையில் புதுவையில் காசநோய் பரிசோதனை உள்ளிட்ட சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், காசநோய் பாதிப்புள்ளவா்களுக்கான ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
தனியாா் நிறுவனம் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான ஊட்டச்சத்து உணவுப் பெட்டகத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வழங்கினாா். நிகழ்ச்சியில் தனியாா் நிறுவனத் தலைமை அதிகாரி கண்ணப்பன், சுகாதாரத் துணை இயக்குநா் ரகுநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தமிழரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

