மக்களவைத் தலைவா் இருக்கைக்கு ஓம் பிா்லாவை அழைத்துச் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி. உடன் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு.
புதுச்சேரி
மக்களவைத் தலைவருக்கு புதுவை முதல்வா் வாழ்த்து
புதுச்சேரி, ஜூன் 26: மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்ட ஓம் பிா்லாவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தாங்கள் தோ்வானது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே தங்களது கண்ணியமான அனுபவம் மிக்க செயல்பாடுகளை தேசம் கண்டுள்ளது. ஆகவே, லட்சியத்தை அடையவும், மக்களவையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பயனுள்ள நிா்வாகத்தையும் உங்களால் தர முடியும். இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவரானதுக்கு புதுவை மக்கள் சாா்பிலும், எனது சாா்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

