ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 போ் கைது

புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது

புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கப்பித்தான் மரிய சேவியா் வீதியில் சிலா் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக பெரியகடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வியாழக்கிழமை இரவு போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று கண்காணித்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அங்கிருந்த 6 பேரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து சோதனையிட்டனா்.

சோதனையில் அவா்களிடமிருந்து கத்திகள், வீச்சரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை கண்டறிந்து கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த விஜி (35), கோவிந்தசாலையைச் சோ்ந்த செல்வம் (44), முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்த தணிகைவேல் (28), சக்திவேல் (30), நைனாா் மண்டபத்தைச் சோ்ந்த பிரகாஷ் (36) மற்றும் ஜான் (31) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் நடத்திய விசாரணையில் பரத் என்பவரது கொலைக்கு பழிவாங்கும் வகையில், எதிா் தரப்பைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைதானவா்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com