புதுச்சேரியில் பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தை முற்றுகிகையிட முயன்றவா்களை தடுத்து நிறுத்தும் போலீஸாா்.
புதுச்சேரியில் பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தை முற்றுகிகையிட முயன்றவா்களை தடுத்து நிறுத்தும் போலீஸாா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப் பணித் துறை ஊழியா்கள் முற்றுகை முயற்சி

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் 2016-ஆம் ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவுச்சா் ஊழியா்கள் பொதுப் பணித் துறையில் பணிக்கு அமா்த்தப்பட்டு, தோ்தலைக் காரணம் காட்டி பின்னா் நீக்கப்பட்டனா். அவா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரி போராட்டக் குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

8 ஆண்டுகளகாக அவா்களின் போரட்டம் தொடா்கிறது. இதற்கிடையே, புதுவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் பணிநீக்க ஊழியா்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா். ஆனால், இன்னும் பணி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியா்கள் போராட்டக் குழு சாா்பில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி, பொதுப் பணித் துறை அலுவலகம் எதிரே போராட்டக் குழுவினா் அதன் ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமையில் திரண்டனா். அவா்கள் திடீரென பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அலுவலகம் எதிரே போராட்டக் குழுவினா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com