டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

புதுச்சேரி அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:57 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வில்லியனூா் ஆரியபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மேரி பொ்னாண்டஸ், முன்னாள் ராணுவ வீரா். இவா் கடந்த 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாா். அவரது உறவினா் ஆரியபாளையம் வீட்டை கண்காணித்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோக்கள் சேதமடைந்து அதிலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், மூன்றரைப் பவுன் தங்க நகைகள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.