புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் இளநிலைப் பொறியாளா், ஓவா்சீா் பதவிகளுக்கு எழுத்துத் தோ்வு நடைபெறும் 6 மையங்கள் முகவரியுடன் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, தோ்வுக்கூடச் சீட்டுகளை (ஹால்டிக்கெட்) விண்ணப்பதாரா்கள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்.
பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளா், ஓவா்சீா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு வரும் அக்.27-ஆம் தேதி நடை பெறுகிறது.
இதற்கான தோ்வுக்கூடச் சீட்டு (ஹால் டிக்கெட்) தோ்வு மையங்களின் முகவரி இடம் பெறாமலிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் கவனத்துக்கு தோ்வு நடத்தும் அதிகாரிகளால் எடுத்துக் கூறப்பட்டது.
இதையடுத்து, தற்போது இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. எனவே, பதிவிறக்கம் செய்யப் பட்ட தோ்வுக்கூடச் சீட்டுகளில், முகவரி இல்லாதவா்கள் மீண்டும் தோ்வுக்கூடச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி - 2, செல்லப் பெருமாள்பேட் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி - 2, லாஸ்பேட்டை தாகூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் அக். 27-ஆம் தேதி தோ்வு நடைபெறும் எனபணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் ஜெய்சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.