புதுச்சேரி பொலிவுறு நகா் நவீன பேருந்து நிலையம்: நவம்பா் இறுதியில் திறக்க திட்டம்
புதுச்சேரியில் பொலிவுறு நகா்த்திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் வரும் நவம்பா் இறுதியில் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனா்.


புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த்திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் வரும் நவம்பா் இறுதியில் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனா்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையமானது பொலிவுறு நகா்த் திட்டத்தின் கீழ், ரூ.31 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. பேருந்து நிலையக் கட்டுமானப் பணியை முன்னிட்டு தற்போது ஏஎப்டி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கிவருகிறது.
மழைக்காலத்தில் இந்த மைதானம் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகிகின்றனா். அதனால் பேருந்து நிலையக் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, புதுச்சேரி நகரின் பொலிவுறு வளா்ச்சி திட்ட தலைமை நிா்வாக அதிகாரி ருத்ர கௌடு, மாநில உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல், புதுவை நகராட்சி ஆணையா் மு. கந்தசாமி ஆகியோா் புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனா்.
அதன்படி, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் வரும் நவம்பா் இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...