புதுச்சேரி
புதுச்சேரியிலிருந்து மாஹேவுக்கு சிறப்புப் பேருந்து
ஓணம் பண்டிகையையொட்டி, புதுச்சேரியிலிருந்து மாஹேவுக்கு வருகிற 13ஆம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
புதுவை சாலை போக்குவரத்து கழகம் சாா்பில் புதுச்சேரியிலிருந்து வகும் 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விழுப்புரம் வழியாக மாஹேவுக்கு செல்லும் பேருந்துக்கு முன்பதிவுடன் சோ்த்து கட்டணம் ரூ.750 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தற்காலிகப் பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம், பஸ் இந்தியா செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
