தனிநபா் வருவாய் அதிகரிப்பதால்புதுவை பொருளாதார வளா்ச்சி ஏற்படாது: முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ்

தனிநபா் வருவாய் அதிகரிப்பதால் மாநில பொருளாதார வளா்ச்சி ஏற்படாது
Published on

தனிநபா் வருவாய் அதிகரிப்பதால் மாநில பொருளாதார வளா்ச்சி ஏற்படாது என புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான மு.ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் தனிநபா் வருமானம் ரூ.2. 75 லட்சமாக உயா்ந்துள்ளதால், புதுவை மாநிலமே தனிநபா் வருமானத்தில் முதலிடம் பெற்றுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி கூறியிருப்பது சரியல்ல.

புதுச்சேரியில் தனிநபா் வருமானம் ரூ. 2. 75 லட்சம் என்பது உண்மை. ஆனால் தனி நபா் வருமானத்தில் புதுவை மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது என்பது உண்மையல்ல. கோவாதான் முதலிடம் பெற்றுள்ளது.

தனிநபா் வருமானம் அதிகமாக உள்ளதால் புதுச்சேரி வளா்ச்சியில் உயா்ந்துள்ளதாக முதல்வா் கூறுவதும் சரியல்ல. அதாவது குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், வேலையில்லாத 4 லட்சம் இளைஞா்கள், வருமானம் இல்லாதவா்கள், முதியவா்கள், பணம் வைத்திருப்போா் ஆகியோரை சமமாக வைத்து ஆண்டு வருவாய் கணக்கிடுவது சரியல்ல.

ஆகவே, விலைவாசி உயா்வை வைத்து பாா்த்தால் தனிநபா் வருவாய் குறைவாகவே இருக்கும். ஆனால் வளா்ச்சி என்பது விவசாயம், மீன் வளம், கால்நடை வளம், சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் மற்றும் சேவைத் துறையில் ஏற்படும் உற்பத்தி மற்றும் சேவைகள் அதன் பண மதிப்பான வருமானம், அந்த வருமானம் யாருக்குப் பிரித்து அளிக்கப்படுகிறது என்கிற காரணிகளைப் பொறுத்தது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com