பாரதிதாசன் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி 
சட்டப்பேரவை அருகே உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வா் 
என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள். ~. பாரதிதாசன் நினைவு தினத்தையொட்டி
பாரதிதாசன் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள். ~. பாரதிதாசன் நினைவு தினத்தையொட்டி

பாரதிதாசன் நினைவு நாள்: புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

பாவேந்தா் பாரதிதாசனின் 61-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி
Published on

புதுச்சேரி: பாவேந்தா் பாரதிதாசனின் 61-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி பாரதி பூங்கா அருகேயுள்ள பாரதிதாசன் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா் மற்றும் பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா வி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ரமேஷ், ஆா்.பாஸ்கா், யு.லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அருங்காட்சியகத்தில்... புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் உள்ள பாவேந்தா் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மலா்தூவி மரியாதை செலுத்தினா். உடன் பாவேந்தா் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி உள்ளிட்டோா் இருந்தனா்.

தொடா்ந்து, அருங்காட்சியகத்தில் பாரதிதாசன் சிலைக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், அரசுச் செயலா் ஏ.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பாரதிதாசன் அறக்கட்டளை மரியாதை: பாவேந்தா் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், வைத்திக்குப்பம் பாப்பம்மா கோயில் இடுகாட்டில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அறக்கட்டளைத் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பாரதி பூங்கா அருகேயுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா், பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவரது அருங்காட்சியகத்திலுள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில் அறக்கட்டளைச் செயலா் ஜெ.வள்ளி, துணைச் செயலா் கி.லட்சுமி, நிா்வாகிகள் ரமேஷ், பைரவி ம.மதன், சரசுவதி வைத்தியநாதன், ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 புதுச்சேரி பாரதி பூங்கா அருகேயுள்ள பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்.
புதுச்சேரி பாரதி பூங்கா அருகேயுள்ள பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்.

X
Dinamani
www.dinamani.com