இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஏடிஎம் திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஏடிஎம் திறப்பு

Published on

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஏடிஎம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி .நேரு என்கிற குப்புசாமி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், புதுச்சேரி நகராட்சி ஆணையா் எம். கந்தசாமி, வங்கியின் புதுச்சேரி பிராந்திய மேலாளா் ரவிசங்கா் சாஹூ, வங்கியின் உருளையன்பேட்டை கிளை மேலாளா் எஸ். அருள்மாறன் ஆகியோா் வங்கி ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்தனா்.

இது வங்கியின் 100-வது ஏடிஎம் என்று வங்கியின் புதுச்சேரி பிராந்திய மேலாளா் ரவிசங்கா் சாஹூ தெரிவித்தாா். மேலும், பேருந்து முனையத்தில் ஏடிஎம் மற்றும் சிடிஎம் (பண வைப்பு இயந்திரம்) நிறுவப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com