புதுச்சேரி
ஜோஹோ தலைவா் ஸ்ரீதா் வேம்புவை மீண்டும் சந்தித்த புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
ஜோஹோ நிறுவனத் தலைவா் ஸ்ரீதா் வேம்புவை இரண்டாவது முறையாக புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் வியாழக்கிழமை சந்தித்தாா்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்காசி, மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீதா் வேம்புவை சந்தித்த புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் தென்காசியில் ஸ்ரீதா் வேம்புவை சந்தித்தாா்.
இந்தச் சந்திப்பின்போது ஜோஹோ நிறுவனம் புதுச்சேரியில் தொழில் தொடங்க வருமாறு உள்துறை அமைச்சா் வேண்டுகோள் விடுத்தாா்.
தகவல் தொழில்நுட்பத்தில் அசுர வளா்ச்சி கண்டு வரும் உலகின்
முன்னணி நிறுவனமான ஜோஹோ புதுச்சேரியில் அமைவதன் மூலம்
ஏராளமான இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், புதுச்சேரி இளைஞா்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் அமைச்சா் வலியுறுத்தினாா்.
