முள்ளோடை பகுதியில் ஆண் சடலம்: அடித்துக் கொலையா என விசாரணை
புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அவா் அடித்துக் கொலை செய்யப்பப்டடாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி-கடலூா் எல்லைப் பகுதியான முள்ளோடை நுழைவுவாயில் அருகே உள்ள தேநீா் கடை முன்பு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ா் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிருமாம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் வந்ததால், போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினா்.
முதல் கட்ட விசாரணையில் இறந்தவா் பேப்பா், பாட்டில் உள்ளிட்ட பழைய பொருட்களைச் சேகரித்து அதனை விற்று வாழ்ந்து வந்தவா் என்பது தெரியவந்தது. மேலும், அவரை மா்ம நபா் தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருப்பதும் தெரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வைத்தனா்.
இந்தக் கொலை தொடா்பாக கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் நபா் ஒருவா் இறந்தவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. அதனைக் கொண்டு கொலையாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
மது போதையில் ஏற்பட்ட தகராறினால் கொலை நடந்தததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என்று போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.
